NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் வசூலிக்கப்படுவது இலங்கையில்..

தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக  Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மின்சார கட்டணம் 3 மடங்கு அதிகமாக உள்ளதென அந்த  நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

பொருளாதாரம் மற்றும் தொடர்புபட்ட பகுப்பாய்வுத் தகவல்களை வழங்கும் இலங்கையின் பிரபல நிறுவனமான public finance.lk-வின் பகுப்பாய்வு அறிக்கையில்,  2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூர் மின்சார பாவனையாளர்கள் 100, 200, 300 அலகுகளை பயன்படுத்தியபோது செலுத்தியுள்ள கட்டணம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இதன் பகுப்பாய்வின் போது  வழங்குநரின் உற்பத்திச் செலவு மாத்திரம் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் மேலதிகமாக அறவிடப்படுகின்ற சமூக பாதுகாப்பு வரி போன்ற அரச வரிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவில்லை.

இலங்கைக்கு அடுத்ததாக தெற்காசியாவின் அதிக மின் கட்டணம் வசூலிக்கும் நாடாக பாகிஸ்தான் காணப்படுகின்றது. 

எனினும், இலங்கையுடன் ஒப்பிடும்போது குறித்த கட்டணம் மிகவும் குறைவாகவுள்ளதெனவும்  Verité Research  நிறுவனம் தெரிவித்துள்ளது.

100 அலகுகளை நுகரும் இலங்கையிலுள்ள வீடொன்று செலுத்த வேண்டிய மின்சார கட்டணம்,  அதே அலகுகளைப் பயன்படுத்தும் பாகிஸ்தான் வீடுகளில் அறவிடப்படும் கட்டணங்களை விட 50% அதிகம் என பகுப்பாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles