தேசிய கண் வைத்தியசாலையின் சகல சத்திர சிகிச்சைகளும் நேற்று முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம்.தௌபிக் தெரிவித்துள்ளார்.
சத்திரசிகிச்சை அறையில் கிருமிகள் பரவுவதை துரிதமாக அகற்றி வழமை நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில், சத்திரசிகிச்சை அறைக்குள் கிருமி எவ்வாறு பிரவேசித்தது என்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுகாதார நிபுணர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.