NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட இளைஞர் தின வெற்றி கிண்ண கிரிக்கெட் போட்டி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இலங்கை தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட இளைஞர் தின வெற்றி கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

நாளை (12) 2000 இளைஞர் யுவதிகளின் பங்குபற்றலுடன் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கொண்டாடப்படவிருக்கிறது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்யும் இந்நிகழ்வில் பல விசேட அம்சங்களும் இடம்பெறவிருக்கின்றன.

மேலும், நாட்டின் அனைத்து பிரதேச செயலக பிரிவிலும் கிரிக்கெட், வொலிபோல், கபடி, வலைப்பந்து ஆகிய போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும், வெற்றி கேடயங்களும் வழங்கப்படவுள்ளன.

அன்றைய தினம் இளைஞர்களுக்கான விசேட தொழில் வழிகாட்டல் வேலைதிட்டமும், ஐக்கிய நாடுகள் சபையின் வேலைதிட்டங்களின் படி இவ்வருடம் ‘பசுமை கேடயம் மற்றும் நிலையான அபிவிருத்தி ‘எனும் தொணிப்பொருளின் கீழ் நாடுப்பூராகவும் பசுமை வேலைத்திட்டங்கள் பற்றிய தெளிவுப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வுகளின் போது அன்றைய தினம் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உடற்பயிற்சி மையம், நீச்சல் தடாகம் ஆகியவற்றை இலவசமாக இளைஞர்கள் பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளைஞர்களை கவரும் வகையிலான ‘குழழன கநளவiஎயட’ ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இரவு வேளையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விசேட கலாசார குழுவினரால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் ‘தம்பப்பண்ணி’ இசைநிகழ்ச்சியும் இடம்பெறவிருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles