(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.
இதன்படி 7 உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதியின் சிபாரிசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தேசிய கொள்முதல், நிதி, நீதித்துறை மற்றும் பொது சேவை ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், தேர்தல்கள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை டின்பது சுட்டிக்காட்டத்தக்கது.