தேசிய விளையாட்டுப் பேரவைக்கான புதிய உறுப்பினர்களை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பெயரிட்டுள்ளார்.
15 பேரை கொண்ட இந்த பேரவையின் தலைவராக மையா குணசேகர பெயரிடப்பட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சிதத் வெத்தமுனி, பேராசிரியர் அர்ஜூன டி சில்வா, சட்டத்தரணி பண்டுக கீர்த்திநந்த உள்ளிட்டவர்களும் அதில் அடங்குகின்றனர்.
முன்னதாக தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் அர்ஜூன ரணதுங்க செயற்பட்டிருந்தார்.