தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது.
அதன்படி, தேசிய வெசாக் வாரம் இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.
வெசாக் வாரத்துடன் இணைந்து அன்னதானம் மற்றும் தியானங்களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வருடத்திற்கான தேசிய வெசாக் விழா எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி சிலாபம், மாதம்பே கெபேல்லேவல ஸ்ரீ ரத்தினசிறி பிரிவேனாவில் நடைபெறவுள்ளது.