ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள் 2,098 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (02) வரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 2098 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 754 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,266 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 14 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 64 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.