ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த தரப்புகளை மேற்கோள்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி முதலில் ஜனாதிபதி தேர்தலையும் பின்னர் பாராளுமன்றத் தேர்தலையும் விரும்புகின்ற நிலையில் பசில் ராஜபக்ச அதற்கு நேர்மாறான செயற்பாட்டை விரும்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கு எவ்வித தடைகளும் இல்லை எனினும், இறுதியில் பொது மக்களுக்கு உகந்த தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்றும் உதய கம்மன்பில கோரியுள்ளார்.