NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் பிரசாரம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வீடுகளுக்கு பேரணியாக சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க சட்டம் இடமளிக்கவில்லை எனவே ஐந்து பேருக்கு மேற்படாத குழு மாத்திரமே வீடுகளுக்குச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுகின்றமை தொடர்பிலும் அவர் தகவல் வெளியிட்டார்.

அதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாத்திரமே வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வாகனத்தை தவிர ஏனைய அனைத்து வாகனங்களிலும் ஸ்டிக்கர் அல்லது வேறு பிரசாரங்களை காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க மேலம் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles