NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இன்னும் 5 நாட்கள் !

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதுடன், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இன்னும் 5 நாட்கள் மாத்திரமே உள்ளன.

அதன்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன.

இதேவேளை, பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெற உள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்றும் (07) நாளையும் (08) இடம்பெறவுள்ளன.

ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிக்க முடியாத முப்படை இராணுவ முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தான் கடமையாற்றும் இடத்திற்கான மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்த முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

“11ம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அமைதி காலம் தொடங்குகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது.

மேலும் வேட்பாளர்களின் குடும்பத்தினர் வாக்கு கேட்க முடியாது, வீடு வீடாக செல்ல முடியாது என்று அனைத்து வேட்பாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அது சட்டவிரோத செயலாகும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles