NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பம்..!

இன்றையதினம் (21) சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பமானது.

குறித்த விகாரையானது பொதுமக்களது காணிகளை அபகரித்து அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அகற்றுமாறு கோரி ஒரு வருட காலமாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு குறித்த விகாரையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும்பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles