NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொடர்ந்தும் இரத்தாகிவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பயணங்கள் – காரணம் வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு வாரங்களில், சுமார் 30 விமான பயணங்களை இரத்து செய்துள்ளதுடன் தாமதப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் தங்களின் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளத்தை உயர்த்துவதற்கான தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதற்கான காரணமாகும் நேற்று முன்தினம் (21) 8 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக பத்திரகே கருத்து தெரிவிக்கும் போது, தமது விமான சேவை நிறுவனத்திடம் போதிய விமானங்கள் இல்லை என்பதே பிரதான பிரச்சினையாகும் என்றார்.

அத்துடன், வேறு சில காரணங்களால் விமானங்கள் இரத்து செய்யப்படுவதுடன் தாமதமாகிவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியின் காரணமாக தங்களது விமான நிறுவனம் தனது சேவையை சிறந்த முறையில் பராமரித்து வருவதில் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles