இலங்கையின் ஆடைத் தொழிற்துறையானது தொடர்ந்து நஷ்ட்டதிற்கு உள்ளாகியுள்ளதுடன், போட்டி நாடுகளுகளுடன் ஒப்பிடுகையில் அதன் சந்தைப்பங்கை இழக்கத் தொடங்கியுள்ளது என உச்ச தொழிற்துறை அமைப்பான கூட்டு ஆடைகள் சங்க மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது.
இலங்கையை பொருத்தவரை அந்நிய செலாவணியை அதிகம் பெற்றுக்கொடுத்த ஒரு துறை ஆடை தொழிற்துறையாகும். ஆனால், தற்போதைய நிலைமை ஆடைத்தொழிற் துறைக்கு சாதகமாக இல்லை என்பதை ஆய்வுகள் கூறுவதாகவும் கூட்டு ஆடைகள் சங்க மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சந்தைகளில் சிறந்த சந்தை அணுகல் ஏற்பாடுகளால் பயனடையும் நாடுகளுக்கான சந்தைப் பங்கை இலங்கை இழக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை இந்த இழந்த சந்தைப் பங்கை மீளப் பெறுவதற்கு, இந்த சந்தைகளுக்கு சிறந்த அணுகலைப் பெற வேண்டும் எனவும் அதிகூடிய உற்பத்திகளை வெளிக்கொண்டவரவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் ஆடை ஏற்றுமதிகள் கடந்த ஜூலை மாதத்தில் அதிக வீழ்ச்சியை எட்டியுள்ளது.