ரஸ்யா தலைநகர் மொஸ்கோ பகுதியில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தை உக்ரேனின் ஆளில்லா விமானங்கள் தாக்கியுள்ளதாக மொஸ்கோவின் மேயர் Sergey Sobyanin தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் 2 ஆளில்லா விமானங்களை வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
‘பயங்கரவாத தாக்குதலை நடத்த கிய்வ் ஆட்சியின் மற்றொரு முயற்சி’ இது என ரஷ்ய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை மொஸ்கோவின் விமான நிலையங்களுக்கு பயணிக்கவிருந்த அனைத்து விமானங்களும் இடைநிறுத்தப்பட்டன,
இதேவேளை ரஷ்ய தலைநகர் பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆறாவது இரவு வான்வழித் தாக்குதல் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.