(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நீர் ஆதாரங்கள் அணைத்தும் வற்றி வறண்ட பிரதேசமாகி வருவதால் திறந்த வெளியில் வேலை செய்யும் விவசாயிகளின் நீர் பாவனை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், சிறுநீரக தொற்றுநோய் அபாயங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளாக, தொற்றுநோய் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
வறண்ட பிரதேசத்தில் ஏற்கனவே பல விவசாயிகள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் நோய் நிலைமைகள் அதிகரிக்கலாம் மற்றும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வறட்சியான காலநிலையினால் நீர் ஆதாரங்கள் வற்றிப்போவதால் ஒருபுறம் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பதாகவும், மறுபுறம் குடிநீரின்மையால் விவசாயிகள் தவித்து வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.