NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொலைபேசியால் பறிப்போன 5, வயது சிறுமியின் உயிர்…!

களுத்துறை – மக்கொனை பகுதியில் கையடக்க தொலைபேசி ஒன்றை சார்ஜ் செய்ய முயன்ற ஐந்து வயதுச் சிறுமியொருவர், மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மக்கொனை, முங்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து வயது முன்பள்ளி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பேருவளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக களுத்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles