NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தோனியின் ஜெர்சி ‘நம்பர் 7க்கு’ ஓய்வு!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 1998ஆம் ஆண்டுமுதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

முதல் முதலில் பீகார் அணிக்காகக் களமிறங்கிய அவர், அடுத்து இந்திய அணியில் இடம் பிடித்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், மகேந்திரசிங் தோனி கிரிக்கெட்டுக்கு செய்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7க்கு BCCI ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் ஜெர்சி ‘7’ ஐ இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. இதற்கு முன்னதாக சச்சினை கௌரவிக்கும் வகையில் அவரது 10ம் நம்பர் ஜெர்சிக்கு 2017ம் ஆண்டு BCCI ஓய்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தோனி தலைமையில் இந்திய அணி T20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles