பிரித்தானிய பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியுற்ற நிலையில் அதன் தலைவர் ரிஷி சுனக்கை மேற்கோள் காட்டி ஐரோப்பிய ஏர்லைன்ஸ் ரியானேர் (Ryanair) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளது.
அந்தப் பதிவில் “ரிஷி,கவலை வேண்டாம் உங்களுக்காக, எங்களிடம் இருக்கையொன்று உள்ளது” என பதிவிட்டுள்ளது.
அவரது பதவி பறிபோன இந்த சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய ஏர்லைன்ஸ் ரியானேர் அவரை கேலிக்குள்ளாக்கும் நிலையில் இவ்வாறு விமர்சித்துள்ளது.
கன்சட்வேட்டிவின் இந்த தோல்வியானது 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததையடுத்து, தோல்விக்கு ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களிடம் மன்னிப்புக் கோரினார்.
இழப்பிற்கு நான் பொறுப்பேற்கிறேன் கடந்த தேர்தல்களைப் போலவே இந்த இடைவெளி தலைகீழாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.