இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி மற்றும் ஹவுரா லங்கா தலைவர் விரஞ்சித் தாம்புகல ஆகியோருக்கு எதிரான வரி விலக்கு தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை பெற்றுத் தருமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஜூலை 31ஆம் திகதி குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த நேற்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 190இன் படி, குறித்த இரண்டு நபர்களும் வரிச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்துள்ளார்களா என்பதை விசாரிக்க ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.