(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களை நேற்று (26) கடுவலை நீதவான் விசாரணைகளுக்காக முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 8 பேரையும் தலா 100இ000 ரூபா சரீரப் பிணையிலும் கடுமையான பிணை நிபந்தனைகளிலும் விடுவிக்குமாறு கடுவலை நீதவான் சனிமா விஜேபண்டார உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில், நவகமுவ பிரதேசத்தில் பிக்கு ஒருவர், இரு பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டிருந்ததுடன், இரு பெண்களை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.