நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக பூச்சியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போது டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் அடிக்கடி நிகழும் மழைப்பொழிவு அதிகரிப்பு மற்றும் வெப்பநிலை அதிகரிப்புகள் என்பன இந்நிலைமையை மேலும் அதிகரிக்க காரணமாகிறது. குறிப்பாக மேல் மாகாணத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நோயாளர்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டே அதிக நோயாளிகளைக் கொண்ட ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புள்ளிவிவர தரவுகளின்படி, 2017க்குப் பிறகு, 2023ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த நிலை எதிர்காலத்தில் உருவாகலாம். தற்போதைய ஆபத்து சூழ்நிலை காரணமாக பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.