நாடளாவிய ரீதியில் காணப்படும் மின்மாற்றிகளில் பொருத்தப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான கம்பிகளை குழுவொன்று திருடிச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான கம்பிகளை அடையாளம் கண்டறியப்படாத நபர்களினால் வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
முல்லைத்தீவு மற்றும் களப்பாடு ஆகிய பிரதேசத்தின் பல இடங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் பயணித்த ஒருவரினால் முல்லைத்தீவு மின்சார சபை அலுவலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பொலிஸாருடன் வந்த நிலையில், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், சந்தேக நபர்கள் கம்பிகளை வெட்டுவதற்கு பயன்படுத்திய இரண்டு கத்திகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில், சுமார் 8 மின்மாற்றிகளில் பொருத்தப்பட்டிருந்த கம்பிகள் அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, புதிய கம்பிகளை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.