ஜா-எல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று முதல் 12 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.
அதற்கமைய, ஜா-அல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகள், கட்டான, மினுவாங்கொட மற்றும் கம்பஹா உள்ளுராட்சி சபை பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை, கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தவேலை காரணமாக, எதிர்வரும் 7ஆம் திகதி காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை குடி நீர் விநியோகத் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் டு.சுபாகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நீர் வெட்டானது, கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பகுதியிலும் குச்சவெளி – இறக்கக்கண்டி பாலம் வரையான பகுதியிலும் இடம் பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கேகாலை நகருக்கு 48 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதான நீர்வழிப்பாதையில் பாறை சரிந்து சேதமடைந்தமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.