இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 3.1 வீதம் சுருங்கியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையிலேயே இவ்வாறு குறைவடைந்துள்ளது
2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2,683,374 மில்லியன் ரூபாவாகும் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இது இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 2,597,441 மில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.