NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இரவு 8 மணிவரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புளத்சிங்கள மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொஹுபிட்டியஇ யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட மற்றும் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்களுக்கும் மண் மற்றும் பாறை சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ந்தும் மழையுடனான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளத்து.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மலை பெய்யக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மலை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles