NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் இடங்களை நிராகரிக்குமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்து..!

நாட்டில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் இடங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பொது மக்கள் தொடர்ந்தும் அத்தகைய கடைகளில் இருந்து அரிசியை வாங்குவதாக அதிகாரசபையின் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.


நுகர்வோர் உரிமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் கடைகளை நிராகரித்து பொதுமக்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


இந்நிலையில் நுகர்வோர் பொருட்கள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க இரவில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


அத்துடன் பண்டிகைக் காலங்களில் நுகர்வோர் பெரும்பாலும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் தயாரிப்புத் தகவல்களில் ஏற்படும் மாற்றங்கள் காலாவதி திகதிகளில் ஏற்படும் மாற்றங்கள் காட்டப்படும் விலையை விட அதிக விலைகள் மற்றும் சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்ட நிபந்தனைகள் போன்ற சூழ்நிலைகளைக் கண்காணிக்க தரக் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


அதன்படி வார நாட்களில் அலுவலக நேரங்களில் மட்டுமே 1977 என்ற தொலைபேசி எண்ணை அழைப்பதன் மூலம் முறைப்பாடுகளை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles