NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் பல்வேறு பகுதிகளில் சுமார் 2,300 ஹெக்டேர் நிலப்பகுதி தீக்கிரை!

நாட்டில் நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக சுமார் 2 ஆயிரத்து 300 ஹெக்டேர் நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அத்துடன், வனப் பகுதிகளில் தீ வைக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதுடன், வனப்பகுதிகளை அண்மித்த பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நிஸாந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வனப்பகுதிகளில் தீப்பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைவாக, 95 காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், மாத்தளை, பதுளை, கண்டி, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் அதிகளவிலான தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தீ பரவல் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு கிழக்கு மார்க்க புகையிரதப் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஹபரனைக்கும், கல்ஓயாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், புகையிரத பாதையின் மரக்கட்டைகள் தீப்பிடித்துள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

இருப்பினும், தீப்பிடித்த மரக்கட்டைகள் அகற்றப்பட்டு, புதிய மரக்கட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் மேலம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles