நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருந்து தட்டுப்பாடு நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படிஇ சுமார் 40 வீதமான நோயாளிகள் வைத்தியசாலைகள் மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் இதன் காரணமாக அவர்கள் வைத்தியசாலைகளுக்கு செல்ல அச்சப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் இது மிகவும் ஆபத்தான நிலை எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர்இ
‘ தற்போது இந்த நிலை சாதாரணமாகிவிட்டது. இதை ஒரு சாதாரண சூழ்நிலையாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
இந்த நிலையை மரண எண்ணிக்கையை வைத்து மட்டும் மதிப்பிடாதீர்கள். மரணத்தை நெருங்கி வந்து காப்பாற்றப்பட்ட நோயாளிகள் எத்தனை பேர்? உயிரிழக்கும் அளவிற்கு
எத்தனை நோயாளிகள் சிக்கல்களை எதிர்கொண்டார்கள்?
உதாரணத்திற்கு நீரிழிவு நோய்க்கு மருந்தை உட்கொண்டு அடுத்த மாதம் வைத்தியரிடம் வருகிறார். எனினும் நீரிழிவு அதிகமாக உள்ளது. அடுத்த மாதமும் நீரிழிவு அதிகமாக உள்ளது. மருந்தை உட்கொண்டாலும் நோய் நிலைமை அதிகரித்துள்ளது.
நோயாளி சர்க்கரை அதிகம் சாப்பிடுகிறார் என்று வைத்தியர் நினைத்து மாத்திரைகளின் டோஸ் அதிகமாக வழங்குகிறார் அல்லது மருந்துகளின் வகைகளை அதிகமாக வழங்குகிறார்.
அதன் பிறகு அந்த நபர் தனியார் மருந்தகத்தில் வேறு வகையான மருந்துகளை வாங்குகிறார் ஏனெனில் அரசாங்க வைத்தியசாலைகளில் கிடைக்கும் மருந்து வகை இல்லை. இருப்பினும் நோய் கட்டுப்படுகிறது.
அங்கு ஒரு மரணம் ஏற்படவில்லை. உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் அதுகொல்லாமல் கொல்லும் ஒரு செயன்முறை ஆகும்.
அதாவது மருந்தின் தரம் குறைந்துவிட்டது என்பது நோயாளிக்கு தெரியாது. வைத்தியருக்கும் தெரியாது. இந்த நிலை பற்றி நான் ஒரு மாதத்திற்கு முன்பே தெரிவித்தேன்.
இது ஒரு அவசர நிலை. அமைச்சரவை உடனடியாக கூட வேண்டும்.
யாரும் ஒன்று கூடி தீர்மானத்தை மேற்கொள்வதில்லை. இது இப்போது யாருக்கும் முக்கியமில்லை.. இந்த ஆட்சியாளர்களுக்கு இது ஒரு பிரச்சனையல்ல.’ என தெரிவித்தார்.