அரசாங்க வைத்தியசாலைகளில் இருந்து இரண்டு வகையான மருந்துகளைத் திரும்பப் பெறுவதற்குச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி 2 வகையான எஸ்பிரின் மருந்துகளைத் திரும்பப் பெறுவதற்கான முடிவு செய்துள்ளது.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை இன்று (23) வெளியிட்டுள்ளது.