வேயங்கொடை புனித மரியாள் தேசிய பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்ற 27 மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு மாணவர்கள் விலகுவது ஒரு நாடு என்ற ரீதியில் பாதகமான நிலை என அந்த பாடசாலையின் அதிபர் பி.டி.ஐ.கே.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஏராளமான வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த 27 மாணவர்களும் அந்தப் பாடசாலைகளில் இருந்து விலகியுள்ளனர்.