சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (20) பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன.
இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.