NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாளை முதல் குறைவடையும் பால்மா விலை …!

எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பால் மாவின் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பால் மா இறக்குமதி தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விலைக் குறைப்பானது நாளைய தினம் (15) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அத்துடன் விலையை குறைப்பது தொடர்பில் பால் மா இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விலையை குறைப்பது தொடர்பில் பால் மா இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் நாளை (15) முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  

Share:

Related Articles