NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாளொன்றுக்கு 85 இலட்சம் முட்டைகள் தேவை – அமைச்சர் நளின் பெர்னாண்டோ!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டின் முட்டைத் தேவையில் மூன்றில் ஒரு பங்கையே இறக்குமதி செய்து வருவதாக வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 85 இலட்சம் முட்டைகள் தேவைப்படுவதாகவும், அதில் சுமார் 55 இலட்சம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், சுமார் 35 இலட்சம் முட்டைகள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அமைச்சர் இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், நாளொன்றுக்கு சுமார் 35 இலட்சம் பற்றாக்குறை உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், அது நாளொன்றுக்கு 10 இலட்சம் அல்லது தேவையில் மூன்றில் ஒரு பங்கே எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் கோழி இறைச்சியின் தேவை வருடாந்தம் 200,000 டொன் எனவும் கோழி இறைச்சி நுகர்வு மாதாந்தம் 20,000 டொன் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Share:

Related Articles