NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நியுசிலாந்தின் முன்னாள் இளம் பெண் பிரதமருக்கு உயரிய விருது !

ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் 2ஆவது மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் வழங்கப்பட்டுள்ளது

நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், 2017-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்று, உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற சாதனை புரிந்திருந்தார்.


எவ்வாறாயினும் கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்து, நியூசிலாந்து மக்கள் மற்றும் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் 2ஆவது மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலின் போது அவர் நாட்டுக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்த கவுரவ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதுதொடர்பாக ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவிக்கையில், ‘இந்த விருதை ஏற்றுக்கொள்வது பற்றி நான் இரண்டு மனதாக இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தேசமாக நாம் கடந்து வந்த பல விஷயங்கள் ஒரு தனிநபரைவிட நம் அனைவரையும் பற்றியதாகும். இது எனது குடும்பத்தினருக்கும்இ சக ஊழியர்களுக்கும் எனது வாழ்க்கையின் மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் பாத்திரத்தை ஏற்க என்னை ஆதரித்த மக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இருக்கும்‘ எனதெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles