NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி 2 நாள் பயிற்சி போட்டியில்..

நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 2 க்கு 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் முதலாம் திகதி தொடங்குகிறது.

அதன்படி, நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி 2 நாள் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது.

அதன்படி, இந்திய அணி வீரர்கள் எதிர்வரும் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

இதன்காரணமாக, வீரர்கள் அனைவரும் நாளை மும்பை வரவேண்டும் என டீஊஊஐ தரப்பில் இருந்து உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பயிற்சியில் எந்தவொரு வீரருக்கும் விடுப்போ அல்லது ஓய்வோ கிடையாது என்பதையும் டீஊஊஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Share:

Related Articles