(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அமெரிக்கா கடந்த 2022ஆம் ஆண்டு சில விதிவிலக்குடன் டிக்டொக் செயலியை அரச சாதனங்களில் பயன்படுத்த தடைவிதித்தது.
இந்நிலையில் நியூயோர்க் மாநில நிர்வாகமும் அரச சாதனங்களில் டிக்டொக் செயலியை முற்றிலும் பயன்படுத்த தடைவிதித்துள்ளது.
பாதுகாப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் மேயருக்கான செய்தி தொடர்பாளர் ஜோனா ஆலோன் தெரிவித்துள்ளார்.
டிக்டொக் செயலிலால் நகரின் டெக்னிக்கல் வலையமைப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக சைபர் பிரிவு தெரிவித்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.