NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நியூயோர்க் நகர வீதிகளில் பச்சை நிறத்தில் ஓடிய தண்ணீர்!

நியூயோர்க் நகர வீதிகளில் பச்சை நிறத்தில் ஓடிய தண்ணீர் குறித்த புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக இது போன்று பச்சை நிறத்தில் திரவம் வீதியில் ஓடி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த காட்சிகளை பார்த்த இணைய பயனர்கள் பலரும், இது வெப்பமயமாக்கல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், சில பயனர்கள், இவ்வாறு திரவம் வீதிகளில் ஓடுவது நிலத்தடி நீர் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்பது போன்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Share:

Related Articles