NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீண்ட விடுமுறை தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறையின் போது, அனைத்து அரச உத்தியோகத்தர்களும்(Government Employee) அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தேவையான பணிகளை செய்து  புத்தாண்டை கொண்டாட பொதுத்துறையினருக்கு உறுதுணையாக செயற்பட வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அறிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த நீண்ட விடுமுறையின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் பேணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles