NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீரில் மிதக்கும் மசூதி : உலக அதிசயங்களில் ஒன்றாக இணைய வாய்ப்பு !

நீரில் மிதக்கும் ஒரு மசூதியை டுபாய் அரசாங்கம் கட்டமைத்து வருகின்றது. உலகிலேயே நீருக்கடியில் ஒரு மசூதி அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

55 மில்லியன் திராம்கள் மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த மசூதி உலகின் அதிசயங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னெடுப்பை எமிரேட்ஸ் இஸ்லாமிய விவரங்கள் துறை மற்றும் சாரிட்டபிள் செயல்பாட்டு துறை (IACAD) மேற்கொண்டு வருகிறது.

அதாவது, உலகிலேயே முதல்முறை முழுவதும் பயன்படுத்தக் கூடிய வகையிலான 3டி பிரிண்டிங் மசூதியை உருவாக்க இருக்கின்றனர். டுபாயில் 2 ஆயிரம் சதுர மீற்றரில் கட்டப்படவுள்ளது.

ஒரே நேரத்தில் 600 பேர் தொழுகை நடத்த முடியும். இதற்கான வேலைகள் வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகி வரும் 2025 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 4 மாதங்கள் கட்டடத்தின் 3D பிரிண்டிங் வேலைகள் நடைபெறும்.

அடுத்த 12 மாதங்கள் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இறுதியாக மெருகேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன.

Share:

Related Articles