(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழகம் – இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் (20) கைது செய்துள்ளனர்.
இராமேஸ்வரத்தை சேர்ந்த குறித்த மீனவர்களின் விசைப்படகு நெடுந்தீவு அருகே பழுதாகி நடுக்கடலில் நின்ற நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகு பழுதடைந்தமையின் காரணமாக எல்லை தாண்டி வந்தமை உறுதிசெய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று (22) அதிகாலை மேலும் 22 மீனவர்களை நெடுந்தீவில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று (21) காலை 121 விசைப்படகுகளுடன் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் நெடுந்தீவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் 4 விசைப்படகுகளை சுற்றிவளைத்து, 22 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை முகாம் அலுவலத்திற்கு மேலதிக விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.