NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நெதர்லாந்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வெடிப்பு சம்பவம் – 5 பேர் உயிரிழப்பு..!

நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி நேற்றுமாலை 06:15 அளவில் ஹேக் நகரின் தர்வேகாம்ப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று மாடிகள் கொண்ட குறித்த கட்டடத்தில் தீயணைப்பு படையினர் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், இந்த வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என நெதர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்பு சம்பவத்தில் 5 அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles