NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜீரியாவில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மத்திய நைஜீரியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவை சேர்ந்தவர்கள் திடீரென்று இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

8 பேர் படுகாயம் அடைந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இதற்கிடையே காயம் அடைந்த இராணுவ வீரர்களை மீட்பதற்காக இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வந்தது. அந்த ஹெலிகொப்டர், காயமடைந்தவர்களில் 7 பேரையும், பலியானவர்களில் 11 பேரின் உடல்களையும் ஏற்றிக் கொண்டு சென்றது. ஹெலிகொப்டரின் தொடர்பு திடீரென்று விபத்துக்குள்ளானது.

இது தொடர்பாக அரசின் செய்தி தொடர்பாளர் எட்வர்ட் காப்க்வெட் கருத்து தெரிவிக்கையில், ஹெலிகொப்டர், சுங்கேரு ஆரம்ப பள்ளியில் இருந்து கடுனா பகுதிக்கு புறப்பட்டது. அந்த ஹெலிகொப்டர், சுகுபா கிராமம் அருகே விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் இருந்தவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles