பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு இந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த பொதுச் செயலாளர் மற்றும் ஹசீனாவின் அரசியல் கட்சியின் ஏனைய உயர்மட்டத் தலைவர்கள் உள்ளிட்ட 45 பேருக்கு எதிராகவும் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஷேக் ஹசீனாவை நவம்பர் 18ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.