NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பங்களாதேஷ் பிரதமரை சந்தித்த ரணில்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக அதிபர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த சந்திப்பானது இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ரணில் கடந்த சனிக்கிழமை நாட்டிலிருந்து புறப்பட்டிருந்தார். இந்நிலையில், அவ்விஜயத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றதாக அதிபர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பின் போது இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என்று பங்களாதேஷ் பிரதமர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles