பங்களாதேஷ் நாட்டின் தற்போதைய நிலைமை இலங்கையில் தோற்றம் பெறும் சூழல் காணப்பட்ட போது தனி நபராகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவால்களை பொறுப்பேற்றார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
SUSIL – VOICE CUT
பங்களாதேஷில் ஏற்பட்டது போன்ற நிலைமை அன்று எமக்கு ஏற்பட்;டது. அன்று அதை தடுத்ததன் காரணமாகவே இன்று நாம் இங்கு உரையாற்றிக்கொண்டிருக்கிறோம். 2022ஆம் ஆண்டு இலங்கையிலும் போராட்டம் தீவிரமடைந்தது. எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசை தீவிரமடைந்தது. அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நிலவியது. இவ்வாறான கடுமையான சூழ்நிலையில் தான் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். பாராளுமன்றம் முற்றுகையிடப்பட்டிருந்தால் இன்று எவரும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருக்க முடியாது. உரையாற்றவும் முடியாது. ஆகவே யதார்த்தத்தை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்துக்கு எதிரான போராட்டங்கள் ஒருபோதும் வெற்றிப் பெறாது.