ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 650 இலக்க விமானத்தில் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளை ஸ்திரப்படுத்துவதற்காகவே பசில் ராஜபக்ஷ நாட்டிற்கு வருவதாக, முன்னராக தகவல் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.