(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பெர்னார்ட் அர்னோல்டை பின்னுக்குத் தள்ளி மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலகின் பணக்காரர் யார் என்பதில், இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே கடும் போட்டி நிலவி வந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பிரெஞ்சு வர்த்தகரான அர்னோல்ட் எலான் மஸ்கை கடந்து உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார். கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து டுஏஆர் பங்குகள் 10 சதவீதம் வரை சரிவடைந்து வந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டொலர்கள் வரை சரிந்தது.
மறுபக்கம் எலான் மஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளார். இதில் பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தவை ஆகும். தற்போது எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது.