வெளிநாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பஸ் நடத்துநரின் நேர்மையான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நடத்துநராக கடமையாற்றும் B.பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் நேற்று ஈடுபட்டிருந்தார்.
குறித்த பஸ்ஸில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட கடவுச்சீட்டு, 120,840 இலங்கை ரூபாய் பணம் மற்றும் 300 யூரோ பணத்தினை மீட்டு அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.
இந்த நிலையில் பஸ் நடத்துநரின் குறித்த செயல் பலராலும் பாராட்டப்படுகின்றது.
அத்துடன் கடந்த 2021ம் ஆண்டு பயணி ஒருவரால் தவற விடப்பட்ட 251,000 ரூபா பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி ஒன்றினையும் வீதி நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.