பண்டாரவளை – பூனாகலை 3ஆம் இலக்க பகுதியில் உள்ள பாடசாலையொன்றை நேற்று காட்டு யானை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பாதுகாப்பு வேலியை அமைத்து தருமாறு மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை யானை தாக்குதல் காரணமாக பாடசாலையின் இரு வகுப்பறைகளும், தளபாடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.