பண்டாரவளை ஒபடெல்ல பாடசாலையில் இன்று காலை திடீர் குளவி கொட்டுக்கு இலக்காகி 6 மாணவர்களும் ஐந்து பெற்றோர்களும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலைக்கு அருகே உள்ள தனியார் நிலத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இன்று (24) பண்டாரவளை வலயக் கல்வி அலுவலகம் பாடசாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.